Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கொல்கத்தாவுக்கு எதிரான 6 சிக்சர் அடித்ததன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களை எடுத்த ரோகித் சர்மா

கொல்கத்தாவுக்கு எதிரான 6 சிக்சர் அடித்ததன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களை எடுத்த ரோகித் சர்மா

By: Karunakaran Thu, 24 Sept 2020 3:50:28 PM

கொல்கத்தாவுக்கு எதிரான 6 சிக்சர் அடித்ததன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களை எடுத்த  ரோகித் சர்மா

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றியை பெற்றது. அபுதாபியில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது. கேப்டன் ரோகித்சர்மா 54 பந்தில் 80 ரன் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் 54 பந்தில் 80 ரன் விளாசினார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களை எடுத்து முத்திரை பதித்தார். 185 இன்னிங்சில் அவர் இதை சாதித்தார்.

ipl,kolkata. rohit sharma,200 sixes ,ஐ.பி.எல்., கொல்கத்தா. ரோஹித் சர்மா, 200 சிக்ஸர்கள்

ஐ.பி.எல். வரலாற்றில் 200 சிக்சர்களை எடுத்த 4-வது வீரர் ஆவார். இந்திய வீரர்களை பொறுத்த வரை அவர் 2-வது இடத்தில் உள்ளார். கிறிஸ்கெய்ல் 326 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், டிவில்லியர்ஸ் 214 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், டோனி 212 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

டோனியை நோக்கி தற்போது ரோகித்சர்மா நெருங்குகிறார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது அவர் டோனியை முந்துவார். நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 49 ரன்வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags :
|