Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஹிஜாப் அணியாமல் சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை

ஹிஜாப் அணியாமல் சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை

By: Nagaraj Sun, 01 Jan 2023 10:40:38 PM

ஹிஜாப் அணியாமல் சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை

கஜகஸ்தான்: ஈரானிய வீராங்கனையின் துணிச்சல்... கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில், ஈரானைச் சேர்ந்த செஸ் வீராங்கனையான சாரா காடெம் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார்.

ஈரானைச் சேர்ந்த 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண், முறையாக ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

female athletes,hijab,protest,sport,competition,struggle ,வீராங்கனைகள், ஹிஜாப், எதிர்ப்பு, விளையாட்டு, போட்டி, போராட்டம்

இந்நிலையில், வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் ஈரான் வீராங்கனைகள் ஹிஜாப் அணியாமல், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஹிஜாப் அணியாமல் ஈரானில் பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஈடுபட்டவர்களை பிடித்து தண்டனை அளிக்கப்பட்டதும் நடந்தது. இருப்பினும் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் வீராங்கனைகள் துணிச்சலுடன் இருப்பதும் பாராட்டுக்களை குவித்து வருகிறது;

Tags :
|
|