Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சுரேஷ் ரெய்னா இதற்காகத்தான் ஐபிஎல்லில் இருந்து விலகினரா?...சிஎஸ்கே உரிமையாளர் தகவல்

சுரேஷ் ரெய்னா இதற்காகத்தான் ஐபிஎல்லில் இருந்து விலகினரா?...சிஎஸ்கே உரிமையாளர் தகவல்

By: Monisha Mon, 31 Aug 2020 12:07:40 PM

சுரேஷ் ரெய்னா இதற்காகத்தான் ஐபிஎல்லில் இருந்து விலகினரா?...சிஎஸ்கே உரிமையாளர் தகவல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அணி நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா திடீரென போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பினார்.

ரெய்னா விலகியது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. பஞ்சாப் மாநிலத்தில் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதால் ரெய்னா ஊர் திரும்பியதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது. பின்னர் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

கேப்டன் டோனிக்கு தந்ததை போல் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாததால் ரெய்னா அதிருப்தியில் இருந்ததாகவும், கொரோனா விதிமுறைகள் காரணமாக அறையை உடனே மாற்ற முடியாது என சென்னை அணி நிர்வாகம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதியானதால் ரெய்னா அச்சமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

suresh raina,ipl cricket,csk,uae,corona virus ,சுரேஷ் ரெய்னா,ஐபிஎல் கிரிக்கெட்,சிஎஸ்கே,ஐக்கிய அரபு அமீரகம்,கொரோனா வைரஸ்

இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா விவகாரம் பற்றி சிஎஸ்கே அணி உரிமையாளரும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சீனிவாசன் கூறியதாவது:-

சில நேரங்களில் வெற்றி தலைக்கேறும்போது இப்படி நிகழும். ஐபிஎல் தொடங்கவில்லை; ரூபாய் 11 கோடி வருமானத்தை ரெய்னா இழப்பார் என்பதால் அவர் தவறை உணருவார். சிஎஸ்கே என்பது ஒரு குடும்பம் போன்றது; சீனியர் வீரர்கள் எப்போதும் இணைந்தே இருப்பார்கள். யாருக்கு பிடிக்கவில்லையோ, யாருக்கு மகிழ்ச்சியில்லையோ அவர்கள் தாராளமாக திரும்பி செல்லலாம்.

டோனியுடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன்; தொற்று எண்ணிக்கை உயர்ந்தாலும் கவலை வேண்டாம் என அவர் கூறினார். காணொலியில் வீரர்களிடம் பேசிய டோனி, வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|