Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும் பெங்களூரு எப்.சி. அணியும் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும் பெங்களூரு எப்.சி. அணியும் இன்று மோதல்

By: Karunakaran Fri, 04 Dec 2020 2:07:26 PM

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும் பெங்களூரு எப்.சி. அணியும் இன்று மோதல்

7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. இன்று இரவு நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.சென்னை அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் சென்னையின் எப்.சி. அணி உள்ளது. சென்னை அணியில் தாபா, கோன் கால்வஸ் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். பெங்களூரு அணி தான் விளையாடிய 2 ஆட்டத்திலும் டிராவே செய்துள்ளது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.

isl,chennai fc,football match,bangalore fc ,ஐ.எஸ்.எல்., சென்னை எஃப்சி, கால்பந்து போட்டி, பெங்களூர் எஃப்சி

இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 7 முறை சந்தித்துள்ளன. இதில் 2 அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவானது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. ஏ.டி.கே.மோகன் பகான் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அந்த அணி 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

Tags :
|