Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி

By: Karunakaran Wed, 02 Dec 2020 09:04:45 AM

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி

7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணியும், ஈஸ்ட் பெங்கால் அணியும் மோதின. ஆட்டம் நடைபெற்ற போது, தொடக்கம் முதலே தாக்குதல் பாணியில் இறங்கிய மும்பை அணி 20-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது.

இதில் மும்பை அணி வீரர் ஹூகோ அட்னன் போமோஸ் பின்கள வீரர்கள் மற்றும் கோல் கீப்பரை ஏமாற்றி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் ஆடம் லி பான்ட்ரே அருமையாக கோல் வளையத்துக்குள் திணித்தார். அதன்பின், 48-வது நிமிடத்தில் ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி ஆடம் லி பான்ட்ரே மீண்டும் கோல் அடித்தார்.

isl,mumbai,east bengal,football match ,ஐ.எஸ்.எல்., மும்பை, கிழக்கு வங்கம், கால்பந்து போட்டி

தொடர்ந்து 58-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் மும்பை அணி வீரர் ஹூகோ அட்னன் போமோஸ் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை சக வீரர் ஹெர்னன் டேனியல் கோலாக மாற்றினார். அதன் முடிவில் மும்பை அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியாது.

இதன் மூலம் மும்பை அணி தனது 2-வது வெற்றியை ருசித்தது. ஈஸ்ட் பெங்கால் அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

Tags :
|
|