Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பையை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பையை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி

By: Karunakaran Sun, 22 Nov 2020 2:56:11 PM

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பையை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி

7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடர் மார்ச் மாதம் வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே மாநிலத்தில் நடக்கிறது.

அதாவது அனைத்து ஆட்டங்களும் கோவாவில் ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது. திலக் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், மும்பை சிட்டி அணியும் மோதின. ரசிகர்கள் இன்றி நடைபெற இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

isl,north east united,mumbai,football series ,ஐ.எஸ்.எல்., நார்த் ஈஸ்ட் யுனைடெட், மும்பை, கால்பந்து தொடர்

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், மும்பை சிட்டி அணியும் முதல் பாதி முடிவில் கோல் அடிக்கவில்லை. பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் ஒரு குவேஸி அப்பியா ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், மும்பை சிட்டி அணியை 1-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் இந்த தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Tags :
|
|