Advertisement

ஜடேஜாவும் தயாரிப்பாளராக களம் இறங்குவதாக தகவல்

By: Nagaraj Wed, 08 Mar 2023 10:27:16 AM

ஜடேஜாவும் தயாரிப்பாளராக களம் இறங்குவதாக தகவல்

சென்னை: தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஜடேஜாவும் தயாரிப்பாளராகி உள்ளார்.

சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் தோனி சமீபத்தில் தனது முதல் படமான ‘எம்ஜிஎம்’ குறித்து அறிவிப்பு வெளியிட்டார் மற்றும் ஹரிஷ் கல்யாண் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் தெரிந்த விஷயம் தான்.

cricket,movie,production , எம்ஜிஎம், ஜடேஜா, தோனி

இந்தப் படத்தை இயக்கி இசையமைக்கும் தமிழ்மணி இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஜடேஜாவும் தயாரிப்பாளராகி உள்ளார்.

இவர் தயாரிக்கும் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு பச்சத்தர் கா சோரா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதில் ரந்தீப் ஹூடா மற்றும் நீனா குப்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், ஜெயந்த் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|