Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 17.3 ஓவருக்குள் தடுத்தால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது தாமதமாகவே தெரியும் - கோலி

17.3 ஓவருக்குள் தடுத்தால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது தாமதமாகவே தெரியும் - கோலி

By: Karunakaran Tue, 03 Nov 2020 6:28:42 PM

17.3 ஓவருக்குள் தடுத்தால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது தாமதமாகவே தெரியும் - கோலி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி-யால் 152 ரன்களே அடிக்க முடிந்தது. பின்னர் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்சிபி பந்து வீசியது. இருப்பினும் தவான், ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்சிபி வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இறுதியில் டெல்லி அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. இதனால் ரன்ரேட் அடிப்படையில்தான் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்கான அளவுகோல் என்ன? என்பது தெரியவில்லை.

delhi team,playoffs round,17overs,kohli ,டெல்ஹி அணி, பிளேஆஃப் சுற்று, 17 ஓவர்கள், கோலி

இறுதியில் 17.3 ஓவருக்குள் டெல்லி வெற்றி பெறாவிடில் ஆர்சிபி தோல்வியடைந்தாலும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என அறிவிக்கப்பட்டது. ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு 11 ஓவர்கள் முடிந்த நிலையில்தான் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில், டெல்லி அணி 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்திருந்தது.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், 11-வது ஓவரின்போதுதான் 17.3 ஓவரில் வெற்றி பெற விடக்கூடாது என அணி நிர்வாகம் தெரிவித்தது. ஆட்டம் எங்கள் கையில் இருந்து சென்ற பின்னர் கூட, மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம் என்று கூறினார்.

Tags :