Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முறையாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ஜடேஜா

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முறையாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ஜடேஜா

By: Karunakaran Sat, 03 Oct 2020 1:10:39 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முறையாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ஜடேஜா

ஐபிஎல் தொடரின் 14-வது ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கனர். வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது.

சென்னை அணியில் தீபக் சாஹர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் 8.2 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்ததால் ரவீந்திர ஜடேஜா முன்னதாகவே களம் இறங்கிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

jadeja,first highest scorer,ipl cricket,csk ,ஜடேஜா, முதல் அதிக மதிப்பெண் பெற்றவர், ஐபிஎல் கிரிக்கெட், சி.எஸ்.கே.

கேப்டன் டோனி மற்றும் ஜடேஜா ஜோடி சென்னை அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 34 பந்தில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், முதல் அரைசதம் ஆகும்.

இதற்கு முன் 2012-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 48 ரன்களும், 2011-ல் கேரளா அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 47 ரன்களும், 2012-ல் சென்னை அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 44 ரன்களும் அடித்துள்ளார். நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

Tags :
|