Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 600 விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

600 விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

By: Nagaraj Tue, 25 Aug 2020 10:08:16 PM

600 விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

'டெஸ்ட்டில் 600 விக்கெட்டுகள்' எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 583 ரன்களை அடித்து 8 விக்கெட்டுகளை இழந்த போது டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் முகமது ரிஜ்வான் 53 ரன்களும், அஜார் அலி 141 ரன்களும் அடித்தனர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. நேற்று 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை அடித்தது.

இன்று 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்கப்பட்டது. போட்டி ஆரம்பித்த போது அஜார் அலி 29 ரன்களுடனும், பாபர் அஜாம் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

james anderson,cracker,cricket,record ,ஜேம்ஸ் ஆண்டர்சன், வேகப்பந்து வீச்சாளர், கிரிக்கெட், சாதனை

இந்நிலையில் போட்டியின் 61.2 ஆவது ஓவரின் போது அஜார் அலி விக்கெட்டை எடுத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்த விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும் 600 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியல்; முத்தையா முரளிதரன் - 800, ஷேன் வார்னே - 708, அனில் கும்ப்ளே - 619, ஜேம்ஸ் ஆண்டர்சன் - 600.

Tags :