Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிசின் இறுதி போட்டியில் ஜெனிபர் பிராடி சாம்பியன் பட்டம் பெற்றார்

டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிசின் இறுதி போட்டியில் ஜெனிபர் பிராடி சாம்பியன் பட்டம் பெற்றார்

By: Karunakaran Tue, 18 Aug 2020 2:46:16 PM

டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிசின் இறுதி போட்டியில் ஜெனிபர் பிராடி சாம்பியன் பட்டம் பெற்றார்

அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்றது. கொரோனாவுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் போட்டியின் இறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியும், சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மனும் மோதினர்.

ஜில் டீச்மானுக்கு எதிராக 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜெனிபர் பிராடி வெற்றியைக் கைப்பற்றினார். கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அமெரிக்காவில் நடந்த முதல் தொழில்முறை டென்னிஸ் நிகழ்வு இதுவாகும். இந்த போட்டியில் மேலும் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

jennifer brady,top seat open international tennis,championship,america ,ஜெனிபர் பிராடி, சிறந்த இருக்கை திறந்த சர்வதேச டென்னிஸ், சாம்பியன்ஷிப், அமெரிக்கா

இந்த வெற்றி குறித்து ஜெனிபர் பிராடி கூறுகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் என்னிடம் சொன்னால் அல்லது நான் ஒரு டபிள்யூ.டி.ஏ பட்டத்தை வெல்வேன் என்று நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஜெனிபர் பிராடி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது இதுவே முதன் முறையாகும். டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து பல்வேறு முன்னணி வீரர்கள் கொரோனா பரவலால் விலகியது குறிப்பிடத்தக்கது.

Tags :