Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த கேன் வில்லியம்சன்

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த கேன் வில்லியம்சன்

By: Nagaraj Fri, 16 Dec 2022 9:26:28 PM

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்... நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

new zealand,captain,quit,new captain,in charge,test ,நியூசிலாந்து, கேப்டன், விலகினார், புதிய கேப்டன், பொறுப்பு, டெஸ்ட்

சமீபத்தில், இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களால் விலகினார். இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு டிம் சௌதி தலைமையேற்றார்.

இந்நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இந்த மாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது புதிய கேப்டனாக சவுதி கேப்டன் பொறுப்பு ஏற்க உள்ளார்.

Tags :
|