Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மலேசியாவில் நடந்த கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி: தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் அசத்தல் வெற்றி

மலேசியாவில் நடந்த கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி: தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் அசத்தல் வெற்றி

By: Nagaraj Mon, 03 July 2023 8:38:29 PM

மலேசியாவில் நடந்த கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி:  தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் அசத்தல் வெற்றி

தஞ்சாவூர்: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 22வது மைலோ ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் தஞ்சாவூர் வின்னர் அகாடமியை சேர்ந்த மாணவர்கள் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளனர்.
மலேசியா கோலாலம்பூரில் கடந்த 23, 24 ,25 ஆகிய மூன்று தேதிகளில் சர்வதேச அளவிலான 22வது மைலோ கராத்தே சாம்பியன்ஷிப்- 2023 போட்டிகள் நடந்தது.

karate competition,winner academy,students,bronze medal ,கராத்தே போட்டி, வின்னர் அகாடமி, மாணவர்கள், வெண்கலப்பதக்கம்

இப்போட்டியில் இந்தியா, மலேசியா, ஈரான், ஜப்பான், இலங்கை, இந்தோனேசியா ,பிலிப்பைன்ஸ், நேபாள் என 15க்கும் மேற்பட்ட நாடுககளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட கராத்தே போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சர்வதேச போட்டி ஷிகான் தியாகு பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு, தஞ்சாவூரை சேர்ந்த வின்னர் அகாடமி மாணவர்கள் பிரஜேஷ் ராகவ், அபிலாஷா, கிஷோர், மித்ரன், விஷாலினி ஆகியோர் போட்டியில் பங்கேற்றனர்.

Tags :