Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடரில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்த கிங்ஸ் டேவிட் வார்னர்

ஐபிஎல் தொடரில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்த கிங்ஸ் டேவிட் வார்னர்

By: Karunakaran Fri, 09 Oct 2020 08:57:12 AM

ஐபிஎல் தொடரில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்த கிங்ஸ் டேவிட் வார்னர்

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் முதலே வார்னர்-பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரை சதம் கடந்த நிலையில் 15.1 ஓவரில் அணியின் ஸ்கோர் 160 எடுத்திருந்த நிலையில் 40 பந்தில் 1 சிக்சர் 5 பவுண்டரி உள்பட 52 குவித்த வார்னர் ஐதராபாத் அணியின் ரவி பிஷோனி பந்து வீச்சில் அவுட் ஆனார்.

வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி 15.1 ஓவரில் 160 ரன்கள் குவித்தது. வார்னர் அவுட் ஆன சில நிமிடங்களிலேயே 55 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உள்பட 97 ரன்கள் குவித்திருந்த பேர்ஸ்டோவ் அதே ஓவரில் ரவி பிஷோனி பந்து வீச்சில் வெளியேறினார். தொடக்க வீரர்கள் வெளியேறியபோது 15.4 ஓவரில் ஐதராபாத் அணி 160 ரன்கள் குவித்திருந்தது.

david warner,most runs,50 times,ipl series ,டேவிட் வார்னர், அதிக ரன்கள், 50 முறை, ஐபிஎல் தொடர்

இறுதி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 10 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்சர் உள்பட 20 ரன்கள் குவித்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் 201 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் வார்னர் 40 பந்தில் 52 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனைப் படைத்தார். இதில் நான்கு சதங்கள் அடங்கும்.

விராட் கோலி 5 சதங்களுடன் 42 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 1 ஒரு சதத்துடன் 39 முறையும், ரோகித் சர்மா 1 சதத்துடன் 39 முறையும், ஏபி டி வில்லியர்ஸ் 3 சதங்களுடன் 38 முறையும அரைசதம் அடித்துள்ளனர்.

Tags :