Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அடுத்த விக்கெட் கீப்பராக கே.எல். ராகுலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் அறிவிப்பு

அடுத்த விக்கெட் கீப்பராக கே.எல். ராகுலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் அறிவிப்பு

By: Karunakaran Mon, 17 Aug 2020 4:24:04 PM

அடுத்த விக்கெட் கீப்பராக கே.எல். ராகுலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் அறிவிப்பு

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, நேற்று முன்தினம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எம்.எஸ். டோனி, மூன்று ஐசிசி டிராபிகளை வென்ற கேப்டன், அதிகமுறை நாட்அவுட் கேப்டன், அதிக போட்டிகளில் விளையாடிய கேப்டன் என பல சாதனைகளை படைத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 13-வது சீசனுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் எம்.எஸ். டோனி, நேற்று முன்தினம் சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இந்நிலையில், டோனிக்குப்பின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அடுத்த விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரிஷப் பண்ட்-ஐ டோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக அணி நிர்வாகம் தயார்படுத்தி வந்தபோதும், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங்கில் ரிஷப் பண்ட் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக பணியாற்ற வைத்தனர். அவர் பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங் பணியிலும் சிறப்பாக செயல்பட்டதால், நியூசிலாந்துக்கு எதிராக தொடரில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணி களம் இறக்கியது.

kl rahul,wicket-keeper,former players,dhoni ,கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பர், முன்னாள் வீரர்கள், தோனி

தற்போது, கேஎல் ராகுலுக்குத்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒயிட்-பால் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் விக்கெட் கீப்பர்களான மோங்கியா, எம்எஸ்கே பிரசாத், தீப் தாஸ்குப்தா ஆகியோர் தெரிவித்துள்ளனர். 50 ஓவர் போட்டியை பொறுத்த வகையில் கேஎல் ராகுல்தான் முதல் தேர்வு என்று நினைப்பதாக நயன் மோங்கியா தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தாஸ்குப்தா கூறுகையில், டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரைக்கும் இரண்டு பேரும் ஆடும் லெவன் அணியில் விளையாட முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால், ஒருவருக்குத்தான் வாய்ப்பு என்றால் குறைந்த பட்சம் டி20 அணியிலாவது கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எம்எஸ்கே பிரசாத் கூறுகையில், நியூசிலாந்து தொடரை பொறுத்த வரைக்கும் கேஎல் ராகுல்தான் முதல் தேர்வு. 2-வது சஞ்சு சாம்சன். 3-வதாகத்தான் ரிஷப் பண்ட் இருந்தார் என்று கூறியுள்ளார்.

Tags :