Advertisement

கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் திருமணம் நடந்தது

By: Nagaraj Tue, 24 Jan 2023 10:40:34 PM

கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் திருமணம் நடந்தது

மும்பை: கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் இந்த திருமணம் நடந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். இவரும் ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் ஜோடியாக வெளிநாடு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல்-ஆதியா ஷெட்டி ஜோடி கடந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர்.

இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது

athiya,kl-rahul,mumbai, ,அதியா, கே.எல்.ராகுல், மும்பை

மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. புதுமணத் தம்பதியான கே.எல்.ராகுல் – அதியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கே.எல்.ராகுல் மற்றும் அதியா இருவரும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Tags :
|
|