Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பஞ்சாப் அணியை வீழ்த்த தொடக்கத்திலே கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலை வீழ்த்த வேண்டும் - ஷேன் பான்ட்

பஞ்சாப் அணியை வீழ்த்த தொடக்கத்திலே கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலை வீழ்த்த வேண்டும் - ஷேன் பான்ட்

By: Karunakaran Thu, 01 Oct 2020 2:09:21 PM

பஞ்சாப் அணியை வீழ்த்த தொடக்கத்திலே கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலை வீழ்த்த வேண்டும் - ஷேன் பான்ட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்கம் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்க்கு சிறப்பாக அமையவில்லை. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமானது அல்ல. இரண்டாவது போட்டியில் ஆர்.சி.பி.க்கு எதிராக கே.எல். ராகுல் சதம் விளாசினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மயங்க் அகர்வால் சதம் அடித்தார். இவர்கள் விக்கெட்டை முன்னதாகவே வீழ்த்தினால் அது வெற்றிக்கான முக்கியமான வழி என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பான்ட் தெரிவித்துள்ளார்.

kl rahul,mayang agarwal,punjab,shane bond ,கே.எல்.ராகுல், மாயாங் அகர்வால், பஞ்சாப், ஷேன் பாண்ட்

இதுகுறித்து ஷேன் பான்ட் கூறுகையில், ‘கடந்த சில போட்டிகளில் கே.எல். ராகுல் எங்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளார். அவர் ஒரு தலைசிறந்த வீரர். நாங்கள் இன்று எங்கள் பந்து வீச்சாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது சிறப்பாக விளையாடும் அணிக்கு எதிராக எங்களுடைய திட்டத்தை தீட்டினோம். கே.எல். ராகுல் டைனமிக் வீரர். அவர் மைதானத்தின் எல்லா பக்கத்திற்கும் பந்தை அடிக்க கூடியவர் என்று கூறினார்.

மேலும் அவர், நாங்கள் தலைசிறந்த பவுலிங் யூனிட் வைத்துள்ளோம். எங்களால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பஞ்சாப் அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் இதுவரை சிறப்பாக விளையாடி வருகின்றனர். எங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என்றால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அது நெருக்கடியாக அமையும். அவர்கள் ரன்கள் அடிப்பதை தடுத்து மிகப்பெரிய ஸ்கோரில் இருந்து எங்களை தற்காத்துக் கொள்ள முடியும். இந்த மைதானத்தில் இரண்டு முறை விளையாடி உள்ளோம். அதனால் சீதோஷ்ண நிலை குறித்து எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|