Advertisement

ராஜஸ்தான் அணியை அலற விட்டு வெற்றி பெற்ற கொல்கத்தா அணி

By: Nagaraj Thu, 01 Oct 2020 09:41:15 AM

ராஜஸ்தான் அணியை அலற விட்டு வெற்றி பெற்ற கொல்கத்தா அணி

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தானை தெறிக்கவிட்டு வெற்றி பெற்றனர் கொல்கத்தாவின் இளம் பந்துவீச்சாளர்கள்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பேட்டிங்கில் ஷுப்மன் கில் 47, சுனில் நரைன் 15, ராணா 22, ரஸ்ஸல் 24, கார்த்திக் 1, மார்கன் 34, கம்மின்ஸ் 12, நாகர்கோட்டி 8 ரன்கள் குவித்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 174 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு இது குறைந்த ஸ்கோர் என்று சிலர் பயமுறுத்தினர். ஆனால், நிலைமை தலைகீழாக இருந்தது.

kolkata team,young players,shah rukh khan,twitter page ,கொல்கத்தா அணி, இளம் வீரர்கள், ஷாரூக்கான், ட்விட்டர் பக்கம்

175 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே விக்கெட்களை பறிகொடுத்து மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் என சென்ற போட்டியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் இந்த முறை மோசமாக ஆடினர். டாம் கர்ரன் மட்டுமே கடைசி வரை போராடி 54 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

முதல் இரண்டு போட்டிகளில் 200 ரன்களை எளிதாக எடுத்த ராஜஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு காரணம் கொல்கத்தா அணியின் மூன்று இளம் பந்துவீச்சாளர்கள் தான். சிவம் மவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி என மூன்று இளம் வீரர்களை சிறப்பாக பயன்படுத்தி விக்கெட் வேட்டை நடத்தினார் தினேஷ் கார்த்திக்.

இந்நிலையில் ஷாருக்கான் மற்றும் அவரின் மகன் நேற்று நடைபெற்ற போட்டியை காண மைதானத்திற்கு வந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள். அதுதொடர்பான விடியோவை ஐபிஎல் நிர்வாகம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tags :