Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தை நேரில் சென்று கண்டு ரசித்த ஷாருக் கான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தை நேரில் சென்று கண்டு ரசித்த ஷாருக் கான்

By: Karunakaran Thu, 01 Oct 2020 2:44:59 PM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தை நேரில் சென்று கண்டு ரசித்த ஷாருக் கான்

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. ஜாஃப்ரா ஆர்சர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில்18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

kolkata knight riders,rajasthan royals,shah rukh khan,ipl ,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஷாருக் கான், ஐ.பி.எல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஷாருக் கான். ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது கொல்கத்தா விளையாடும் போட்டிகளை நேரில் சென்று கண்டு ரசிப்பது வழக்கம். அப்போது ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவார். தற்போது கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் விளையாட்டு வீரர்களுடன் அணி உரிமையாளர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர். முக்கியமான நபர்கள் ஒவ்வொருவராக வந்த வண்ணம் உள்ளனர். ஷாருக்கான் நேற்றைய போட்டியை பார்ப்பதற்கான மைதானத்திற்கு வந்திருந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். ஷாருக் கானுடன் அவருடைய மகனும் வந்திருந்தார்.

Tags :