Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

By: Karunakaran Wed, 23 Sept 2020 7:36:50 PM

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

13வது ஐபிஎல் 2020 சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. தற்போது 5-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7.00 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்குகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால், இன்று ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.

kolkata knight riders,toss,field,mumbai indians ,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டாஸ், பீல்ட், மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில், 1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ஹர்திக் பாண்ட்யா, 5. குருணால பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. பும்ரா, 8. பேட்டின்சன், 9. பும்ரா, 10. சவுரப் திவாரி. 11. ராகுல் சாஹர் ஆகிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், 1. சுனில் நரைன், 2. ஷுப்மான் கில், 3. நிதிஷ் ராணா, 4. மோர்கன், 5. அந்த்ரே ரஸல், 6. தினேஷ் கார்த்திக், 7. நிகில் நாய்க், 8. பேட் கம்மின்ஸ், 9. குல்தீப் யாதவ், 10. சந்தீப் வாரியார், 11. ஷிவம் மவி போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

Tags :
|
|