Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • லா லிகா கிளப் கால்பந்து போட்டி 3 மாதங்களுக்கு பின் தொடங்கியது

லா லிகா கிளப் கால்பந்து போட்டி 3 மாதங்களுக்கு பின் தொடங்கியது

By: Karunakaran Sat, 13 June 2020 2:41:23 PM

லா லிகா கிளப் கால்பந்து போட்டி 3 மாதங்களுக்கு பின் தொடங்கியது

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் வந்தன. அதன்படி, ஸ்பெயினில் கொரோனா வைரஸ் அச்சத்தால் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து தொடர் கடந்த மார்ச் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. தற்போது அங்கு கொரோனா தாக்கம் குறைந்து விட்டதால், லா லிகா போட்டியை தொடங்க ஸ்பெயின் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

3 மாதங்களுக்கு பிறகு லா லிகா கால்பந்து போட்டி செவில்லி நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இந்த லீக் ஆட்டத்தில் செவில்லா கிளப் 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் பீட்ஸ் அணியை தோற்கடித்தது. லுகாஸ் ஒகாம்போஸ் முதல் கோல் அடித்தார். பெர்னாண்டோ 2-வது கோலை அடித்தார். இதில் பங்கேற்ற 20 அணிகளில் பார்சிலோனா கிளப் 58 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல் மாட்ரிட் கிளப் 56 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

spain,la liga club,football tournament,seville ,லா லிகா கிளப்,கால்பந்து போட்டி,ஸ்பெயின்,செவில்லி

செவில்லா- ரியல்பீட்ஸ் இடையிலான ஆட்டம் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெற்றது. இந்த லா லிகா கால்பந்து போட்டி இப்போதைக்கு ரசிகர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களின் கரவொலி இன்றி நிசப்தமான சூழலில் இந்த விளையாட்டு நடைபெற்றது. மைதானம் முன் திரண்டு இருந்த சுமார் 200 ரசிகர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.

இதுகுறித்து லா லிகா தலைவர் ஜாவியர் டெபாஸ் கூறுகையில், நாங்கள் மீண்டும் லாலிகா போட்டியில் விளையாடுவோம் என்று எப்போதும் நம்பினேன். அதன்படியே தொடங்கி விட்டோம். இந்த சீசன் ஜூலை 19-ந்தேதி நிறைவடைகிறது. உரிய பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடைசி கட்டத்தில் 10 முதல் 15 சதவீத ரசிகர்களை ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறினார்.

Tags :
|