Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • காயத்தால் விலகுகிறார் லியாம் லிவிங்ஸ்டன்... இங்கிலாந்து வாரியம் அறிவிப்பு

காயத்தால் விலகுகிறார் லியாம் லிவிங்ஸ்டன்... இங்கிலாந்து வாரியம் அறிவிப்பு

By: Nagaraj Mon, 05 Dec 2022 5:18:25 PM

காயத்தால் விலகுகிறார் லியாம் லிவிங்ஸ்டன்... இங்கிலாந்து வாரியம் அறிவிப்பு

ராவல்பிண்டி: வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி முதல் இன்னிங்சில் 657 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை குவித்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 579 ரன்கள் எடுத்தது. அதன்பின் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ரன்களை குவித்தது.

pakistan,played,rawalpindi, ,ஆல்ரவுண்டர், இங்கிலாந்து, ராவல்பிண்டி

ஆட்டத்தின் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 343 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


பாகிஸ்தான் இன்று தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்த ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் விலகியுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து திரும்புகிறார். அவருக்கு மாற்று வீரரை அறிவிப்பது குறித்து இன்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|