Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடரில் லக்னோ கேப்டன் ராகுல் 4 ஆயிரம் ரன்களை கடந்தார்

ஐபிஎல் தொடரில் லக்னோ கேப்டன் ராகுல் 4 ஆயிரம் ரன்களை கடந்தார்

By: Nagaraj Sun, 16 Apr 2023 3:08:58 PM

ஐபிஎல் தொடரில் லக்னோ கேப்டன் ராகுல் 4 ஆயிரம் ரன்களை கடந்தார்

மும்பை: அரைசதம் அடித்து மகிழ்ச்சி ஏற்படுத்தினார்... ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் கேப்டன் கே.எல். ராகுல் 4000 ரன்களை கடந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மோசமான பார்மில் இருக்கும் ராகுல், பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் அடித்தது லக்னோ அணி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ அணி நடப்பு சீசனில் 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராகுல் 56 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.

4000,cricket,ipl,kl rahul,run,ipl match ,4 ஆயிரம்,ஐபிஎல், கிரிக்கெட், கே.எல்.ராகுல், ரன்

மொத்தம் 114 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள கே.எல்.ராகுல், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளைத் தொடர்ந்து லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 74 ரன்கள் எடுத்ததன் மூலம் 4044 ரன்கள் குவித்துள்ளது கேஎல். ராகுல் எடுத்துள்ளார். சராசரி 47.02 ரன்க்ள. ஸ்ட்ரைக் ரேட் 135.16.

ஐபிஎல் தொடரில் 4 சதம் மற்றும் 32 அரைச்சதங்களை கே.எல். ராகுல் அடித்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 132 ரன்கள். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணிக்காக விளையாடிய கே.எல். ராகுல் 670 ரன்களை 14 மேட்ச்சுகளில் எடுத்திருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 6,838 ரன்களுடன் முதலிடத்திலும், ஷிகர் தவான் 6,477 ரன்களுடன் 2 ஆவது இடத்திலும், டேவிட் வார்னர் 6,109 ரன்களுடன் 3 ஆவது இடததிலும் உள்ளனர். தற்போது 4,044 ரன்களை எடுத்துள்ள கே.எல். ராகுல் 14 ஆவது இடத்தில் உள்ளார்.

Tags :
|
|
|