Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மவி, கமலேஷ் நாகர்கோட்டி அபாரமாக பந்து வீசினார்கள் - தினேஷ் கார்த்திக்

மவி, கமலேஷ் நாகர்கோட்டி அபாரமாக பந்து வீசினார்கள் - தினேஷ் கார்த்திக்

By: Karunakaran Thu, 01 Oct 2020 6:03:56 PM

மவி, கமலேஷ் நாகர்கோட்டி அபாரமாக பந்து வீசினார்கள் - தினேஷ் கார்த்திக்

துபாயில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 37 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

கொல்கத்தா பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் மும்பையிடம் தோற்றது. 2-வது போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தியது. இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், பல்வேறு வி‌ஷயங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்மன் கில்,ரஸ்சல்,மார்கன் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். இளம் வீரர்களான மவி, கமலேஷ் நாகர்கோட்டி அபாரமாக பந்து வீசினார்கள் என்று கூறினார்.

mavi,kamalesh nagercoti,bowling,dinesh karthik ,மவி, கமலேஷ் நாகர்கோட்டி, பந்துவீச்சு, தினேஷ் கார்த்திக்

ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப்பை அணிகளை வீழ்த்தி இருந்தது. இந்தத் தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறுகையில், எங்களது திட்டம் எடுபடவில்லை. ஆனால் 20 ஓவர் சில சமயம் இப்படி நடைபெறலாம். தொடக்கத்திலே விக்கெட் இழந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது என்று கூறினார்.

இந்த ஆட்டத்தில், ஷிவம் மவி, நாகர்கோட்டி, வருன் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டும், சுனில் நரீன், கம்மின்ஸ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 3-ந் தேதி சார்ஜாவில் சந்திக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அதே தினத்தில் அபுதாபியில் எதிர்கொள்கிறது.

Tags :
|