Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை சிறந்த வகையில் தொடங்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை சிறந்த வகையில் தொடங்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்

By: Monisha Mon, 21 Dec 2020 5:06:36 PM

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை சிறந்த வகையில் தொடங்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வியடைந்தது. 2-வது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்டு டெஸ்ட் வரலாற்றில் மோசமான நிகழ்வை பதிவு செய்தது. இந்த நிலையில் விராட் கோலி இல்லாமல் இந்திய அணி வருகிற 26-ந்தேதி மெல்போர்ன் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாட பாசிட்டிவ் வழிகளை தேட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

"இந்தியா மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை சிறந்த வகையில் தொடங்க வேண்டும். ஏராளமான நேர்மறையான சிந்தனையுடன் இந்திய அணி செல்வது அவசியம். ஆஸ்திரேலியாவின் பலவீனம் அவர்களுடைய பேட்டிங்.

sunil gavaskar,melbourne test,australia,india,batting ,சுனில் கவாஸ்கர்,மெல்போர்ன் டெஸ்ட்,ஆஸ்திரேலியா,இந்தியா,பேட்டிங்

மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் நம்மால் நல்ல நிலைக்கு திரும்ப முடியும் என இந்திய அணி நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்தியா பாசிட்டிவ் வழிகளை தேடவில்லை என்றால், அதன்பின் 0-4 எனத் தொடரை இழக்கும் நிலை ஏற்படும். ஆனால், நேர்மறையுடன் சிந்தித்தால், பழைய நிலைக்கு திரும்ப முடியும். சில ஃபெர்பார்மன்ஸ்க்கு பிறகு கோபம் இருக்கும். ஆனால், கிரிக்கெட்டில் எதுவென்றாலும் நிகழும்.

இந்தியா இரண்டு மாற்றங்களை எதிர்நோக்கும். முதலில், பிரித்வி ஷாவுக்குப் பதில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்படலாம். 5-வது அல்லது 6-வது இடத்தில் ஷுப்மான் கில் களம் இறக்கப்பட வேண்டும். அவர் நல்ல பார்மில் உள்ளார். சிறப்பாக தொடங்கினால், மாற்றம் ஏற்படும்" என்றார்.

Tags :
|