Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டோனியின் மகளுக்கு தனது கையெழுத்திட்ட ஜெர்சியை அனுப்பிய மெஸ்சி

டோனியின் மகளுக்கு தனது கையெழுத்திட்ட ஜெர்சியை அனுப்பிய மெஸ்சி

By: Nagaraj Fri, 30 Dec 2022 10:28:28 PM

டோனியின் மகளுக்கு தனது கையெழுத்திட்ட ஜெர்சியை அனுப்பிய மெஸ்சி

ராஞ்சி: டோனியின் மகளுக்கு ஜெர்சி... கால்பந்து சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான மெஸ்சி, டோனியின் செல்ல மகள் ஷிவாவுக்கு தனது கையெழுத்திட்ட அர்ஜென்டினா ஜெர்சியை அனுப்பியுள்ளார். இதனை ஷிவா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டோனி தனது விளையாட்டு வாழ்க்கையை கால்பந்து கோல்கீப்பராக தொடங்கினார். பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் ஐசிசி நடத்திய அனைத்து தொடர்களையும் வென்ற ஒரே கேப்டன் ஆவார். டோனிக்கும் மெஸ்ஸிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. உலகக் கோப்பையை உதாரணமாகக் கூறலாம். இருவரும் தங்கள் நாட்டை உலகக் கோப்பைக்கு பெற்று சென்றனர்.

 dhoni daughter,jersey,messi, ,ஜெர்சி, டோனியின் மகள், மெஸ்ஸி

இறுதிப்போட்டியில் இருவரும் அசத்தினார்கள். இங்கே ஒரே வித்தியாசம் அவர்கள் விளையாடிய விளையாட்டு. இந்நிலையில், உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு டோனியின் ஏழு வயது மகள் ஷிவாவுக்கு மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட அர்ஜென்டினா ஜெர்சியை அனுப்பினார்.

மெஸ்ஸி இந்த ஜெர்சியை ஷிவாவுக்கு அனுப்பினார், அதில் “Para Ziva” என்று ஸ்பானிஷ் மொழியில் கையெழுத்திட்டு இருந்தார் . ஷிவா அதை ஆசையுடன் அணிந்து, ‘அப்பாவைப் போன்றே மகள்’ என்று தலைப்பிட்டுள்ளார்.

Tags :
|
|