Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு

‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு

By: Karunakaran Tue, 09 June 2020 1:44:05 PM

 ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு

ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு ஆஸ்திரேலியா அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க் தலைமையில் உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மைக்கேல் கிளார்க்கு 39 வயதாகிறது. அவர் இதுவரை 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதை இதற்கு முன், முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர், ஸ்டீவ் வாக், ஆலன் பார்டர் என கிரிக்கெட் பிரபலங்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் வாங்கியுள்ளனர்.

australia,order of australia,michael clarke,world cup ,ஆஸ்திரேலியா,ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா,மைக்கேல் கிளார்க்,உலக கோப்பை

இந்த விருது குறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில், உண்மையை சொல்லப்போனால் விருது அறிவிப்பை முதலில் நான் நம்பவில்லை. இந்த தேர்வு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், கவுரவத்தையும் அளிக்கிறது. கொரோனா பிரச்சினையில் இருந்து விளையாட்டு வெற்றிகரமாக வெளிவரும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு இந்த ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருது வழங்கப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டு துறையில் மைக்கேல் கிளார்க் ஆற்றிய பங்கிற்காக இந்த கவுரவ விருது வழங்கப்படவுள்ளது

Tags :