Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை அணியின் வெற்றிக்கு பாராட்டுக்கள் தெரிவித்த அமைச்சர் உதயநிதி

சென்னை அணியின் வெற்றிக்கு பாராட்டுக்கள் தெரிவித்த அமைச்சர் உதயநிதி

By: Nagaraj Tue, 04 Apr 2023 5:41:58 PM

சென்னை அணியின் வெற்றிக்கு பாராட்டுக்கள் தெரிவித்த அமைச்சர் உதயநிதி

சென்னை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

chennai-super-kings,congratulations,minister,team,udayanidhi stalin, ,அணி, அமைச்சர், உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ், வாழ்த்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி லீக் சுற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “சேப்பாக்கம் மைதானத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் என்ன ஒரு சிறப்பான ஆட்டம். மின்னல் வேகத்தில் நம்ம டோனி அடித்த 2 சிக்சர்கள் பார்க்க செம த்ரில்லாக இருந்தது. இதே முனைப்புடன் விளையாடி சென்னை அணி இந்தாண்டு கோப்பையை கைப்பற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|