Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின்போது காலில் ஏற்பட்ட மிட்செல் மார்ஷ் தொடரில் இருந்து விலகல்

பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின்போது காலில் ஏற்பட்ட மிட்செல் மார்ஷ் தொடரில் இருந்து விலகல்

By: Karunakaran Wed, 23 Sept 2020 5:52:13 PM

பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின்போது காலில் ஏற்பட்ட மிட்செல் மார்ஷ் தொடரில் இருந்து விலகல்

3-வது ஐபிஎல் 2020 கிரிக்கெட்டின் 3-வது போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஐதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இடம்பிடித்திருந்தார். இவர் பந்து வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன்காரணமாக ஓவரை முழுமையாக முடிக்க முடியாமல் வெளியேறினார். இந்நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mitchell marsh,bangalore,hydrabad,jason holder ,மிட்செல் மார்ஷ், பெங்களூர், ஹைட்ராபாத், ஜேசன் ஹோல்டர்

வேகப்பந்து வீச்சுடன் மிடில் ஆர்டர் வரிசையை பலப்படுத்துவார் என்று நினைத்திருந்த ஐதராபாத் அணிக்கு இது மிகப்பெரிய இழப்பாகும். இந்நிலையில், அவருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டரை ஐதராபாத் அணியில் இணைக்க உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில், ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது.

இதில் 36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் கடந்த தேவ்தத் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். ஆரோன் பிஞ்ச் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Tags :