Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முகமது ஷமி விளையாட மாட்டார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முகமது ஷமி விளையாட மாட்டார்

By: vaithegi Sun, 18 Sept 2022 07:06:15 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முகமது ஷமி விளையாட மாட்டார்

இந்தியா: ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ஆம் தேதி மொகாலியில் தொடங்குகிறது.

இதனை அடுத்து நாக்பூரில் 2-வது போட்டி 23-ஆம் தேதியும், இறுதி மற்றும் 3-வது போட்டி 25 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இத்தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

mohammed shami,australia,t20 ,முகமது ஷமி,ஆஸ்திரேலியா,டி20

எனவே இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷமி விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டு உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. உமேஷ் யாதவ் தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் டி20ஐ விளையாடுவதற்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.

Tags :