Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஜூலை 2-ந்தேதி ஆன்லைன் அகாடமி மூலம் இளம் வீரர்களுக்கு எம்எஸ் டோனி பயிற்சி

ஜூலை 2-ந்தேதி ஆன்லைன் அகாடமி மூலம் இளம் வீரர்களுக்கு எம்எஸ் டோனி பயிற்சி

By: Karunakaran Sun, 28 June 2020 3:28:10 PM

ஜூலை 2-ந்தேதி ஆன்லைன் அகாடமி மூலம் இளம் வீரர்களுக்கு எம்எஸ் டோனி பயிற்சி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி2007-ல் 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையும் கைப்பற்றியது. 2 உலக கோப்பை வென்று சேர்த்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டிக்கு பின் அவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 38 வயதான டோனி, எப்போது ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்த்து உள்ளனர். ஐ.பி.எல். போட்டிக்கு பின் 20 ஓவர் உலக கோப்பையுடன் அவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக ஐ.பி.எல்.போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ms tony,young player,online academy,july 2 ,எம்.எஸ். டோனி, இளம் வீரர், ஆன்லைன் அகாடமி, ஜூலை 2

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் டோனி ஜூலை 2-ந்தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கவுள்ளார். இதற்காக பயிற்சி மையத்தை நிறுவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பயிற்சி மையத்தின் இயக்குனராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரியல் கல்லினன் இருப்பார் எனவும், தோனியின் தலைமையின் கீழ் பயிற்சி மையம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டோனியுடன் கைகோர்த்துள்ள ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவிக்கையில், நாங்கள் இந்த முறையில் ஏற்கனவே 200 பேர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். ஜூலை 2-ம் தேதியில் இருந்து பயிற்சி அளிக்க உள்ளோம். டோனி இதற்கு தலைமை பொறுப்பாளராக இருக்கிறார். மற்ற பயிற்சியாளர்கள் வீரர்களுக்கான பாடங்களை வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Tags :