Advertisement

ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது மும்பை அணி

By: Nagaraj Mon, 12 Oct 2020 10:04:18 AM

ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது மும்பை அணி

டெல்லி அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது மும்பை அணி.

13-வது ஐபிஎல் கிரக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. அபுதுபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியில், பிரித்வி ஷா 4 ரன்னிலும், ரகானே 15 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், தொடக்க வீரர் தவான் உடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

mumbai team,win,points table,ipl,first place ,மும்பை அணி, வெற்றி, புள்ளி பட்டியல், ஐ.பி.எல், முதலிடம்

சற்று அதிரடியை காட்டிய ஷ்ரேயஸ் அய்யர் 33 பந்துகளில் 42 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 52 பந்தில் 69 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில், கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து டி காக்கும், சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து அசத்தினர். இருவரும் 53 ரன்களில் வெளியேறினர். இறுதியில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்து வெற்றி பெற்றது. குருணால் பாண்ட்யா 12 ரன்னும், பொல்லார்டு 11ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசததி உள்ளது.

Tags :
|
|