Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டோனியை நினைவுகூறும் வகையில் இருக்கை ஒதுக்க மும்பை கிரிக்கெட் சங்கம் பரிந்துரை

டோனியை நினைவுகூறும் வகையில் இருக்கை ஒதுக்க மும்பை கிரிக்கெட் சங்கம் பரிந்துரை

By: Karunakaran Tue, 18 Aug 2020 5:49:13 PM

டோனியை நினைவுகூறும் வகையில் இருக்கை ஒதுக்க மும்பை கிரிக்கெட் சங்கம் பரிந்துரை

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகந்த எம்.எஸ். டோனி கடந்த சனிக்கிழமை அன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றபோது, இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி தனது ஸ்டைலில் சிக்ஸ் அடித்தார். இந்த ஷாட் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற பின், டோனி வாங்கிய 50 ஓவர் உலக கோப்பை இதுவாகும். சுமார் 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

mumbai cricket association,seat,dhoni,memory ,மும்பை கிரிக்கெட் சங்கம், இருக்கை, தோனி, நினைவகம்

தற்போது டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அவரை நினைவுகூறும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்க உயர்மட்ட கவுன்சில் உறுப்பினர் அஜிங்க்யா நாய்க் டோனி பெயரில் நிரந்தர இருக்கை அமைக்க வேண்டும் என மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், கிரிக்கெட்டில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ள எம்எஸ் டோனிக்கு மரியாதை மற்றும் நன்றி செலுத்தும் வகையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர் அடித்த கடைசி சிக்ஸ் பந்து எந்த சீட்டில் விழுந்ததோ, அந்த சீட்டிற்கு நிரந்தரமாக டோனியின் பெயரை சூட்ட வேண்டும் என்று அஜிங்க்யா நாய்க் எழுதியுள்ளார்.


Tags :
|
|