Advertisement

மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதல்

By: Karunakaran Tue, 06 Oct 2020 3:10:49 PM

மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதல்

அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 20-வது லீக் ஆட்டத்தில், ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ட்வ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டத்தில் 3-ல் வெற்றி பெற்றது. 2-ல் தோற்றது. மும்பை அணியில் சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர். சிறந்த பேட்ஸ்மேன்களும், சிறந்த பவுலர்களும் மும்பை அணியில் உள்ளனர்.

ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையுடன் 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை அணி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 2 ஆட்டத்தில் அபாரமாக விளையாடி சென்னை, பஞ்சாப் அணிகளை வீழ்த்தியது. அதற்கு அடுத்த 2 போட்டிகளில் கொல்கத்தா, பெங்களூர் அணிகளிடம் தோற்று இருந்தது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து ராஜஸ்தான் 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

mumbai indians,rajasthan royals,clash,ipl ,மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மோதல், ஐ.பி.எல்

மும்பை நல்ல நிலையில் இருப்பதால் அந்த அணியை தோற்கடிப்பது சவாலானது. ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவ் சுமித், பட்லர், சஞ்சு சாம்சன், ராகுல் திவேதியா, ஆர்ச்சர்,டாம் கரண் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று ராஜஸ்தான் அணியோடு இணைந்துள்ளார்.

இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் தனிமையில் இருப்பதால் இன்றைய போட்டியில் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது. இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை 10 வெற்றியையும், ராஜஸ்தான் 10 வெற்றியையும்பெற்றுள்ளன.

Tags :
|