Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

By: Karunakaran Wed, 07 Oct 2020 08:35:27 AM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நேற்று நடைபெற்றபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கி மாஸ் காட்டினர். குயின்டான் டி காக் 15 பந்தில் 1 சிக்சர் உள்பட 23 ரன் குவித்து வெளியேறினார்.

கேப்டன் ரோகித் சர்மா 23 பந்தில் 3 சிக்சர்கள் உள்பட 35 ரன் எடுத்து ஸ்ரேயாஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த இஷான் கிஷன் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் ராஜஸ்தான் பந்து வீச்சை திணறிடித்தார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.

mumbai indians,rajasthan royals,57 runs,ipl ,மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், 57 ரன்கள், ஐ.பி.எல்

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜேய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். 2 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜேய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஜோஸ் பட்டலர் அரைசதம் கடந்தார். அதிரடி ஆட்டத்தால் சற்று நம்பிக்கை அளித்த பட்லர் 44 பந்தில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 70 ரன்கள் குவித்த நிலையில் பேட்டிசன் பந்துவீச்சில் வெளியேறினார்.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.


Tags :