Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். கிரிக்கெட்: மூன்று மேட்ச் வின்னர்களுடன் அதிரடி காட்ட வருகிறது மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மூன்று மேட்ச் வின்னர்களுடன் அதிரடி காட்ட வருகிறது மும்பை இந்தியன்ஸ்

By: Monisha Sat, 19 Sept 2020 12:03:35 PM

ஐ.பி.எல். கிரிக்கெட்: மூன்று மேட்ச் வின்னர்களுடன் அதிரடி காட்ட வருகிறது மும்பை இந்தியன்ஸ்

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

அபிதாபியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் குறித்து பார்ப்போம்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரராக குயின்டன் டி காக், ரோகித் சர்மா ஆகியோரை களம் இறக்க இருக்கிறது. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த கிறிஸ் லின்னும் வந்து சேர்ந்துள்ளார். இந்த மூன்று பேருமே மேட்ச் வின்னர். போட்டி நடக்கும் அன்றைய தினம் அவர்களுடையதாக இருந்தால் தனி நபராக அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்று விடுவார்கள். இதனால் தொடக்க வீரர்களுக்கு பிரச்சினை இல்லை.

ipl cricket,united arab emirates,20 overs,chennai super kings,mumbai indians ,ஐ.பி.எல். கிரிக்கெட்,ஐக்கிய அரபு அமீரகம்,20 ஓவர்,சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் எப்போதுமே சிறப்பாக விளையாடியது கிடையாது. 2014-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது பாதித்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. இந்த இரண்டு மோசமான சாதனைகளையும் தவிர்க்க நினைக்கும்.

மிடில் ஆர்டர் வரிசையில் சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ஆகியோர் சிறப்பாக விளையாடும் போட்டியில் வெற்றியை தேடிக்கொடுத்து விடுவார்கள்.

சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹர், குருணால் பாண்ட்யா ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். பெரும்பாலும் இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே களம் இறங்க வாய்ப்புள்ளது.

வேகப்பந்து வீச்சில் பும்ரா, மிட்செல் கிளேனகன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, டிரென்ட் போல்ட், நாதன் கவுல்டர்-நைல் போன்றோர் உள்ளனர். பும்ரா அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். மலிங்கா இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவு என்பதில் எந்த சந்தேகம் இல்லை. மலிங்கா இடத்தை டிரென்ட் போல்ட் நிரப்புவார் என மும்பை இந்தியன்ஸ் நம்புகிறது.

Tags :