Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற 111 ரன்கள் இலக்காக நிர்ணயம்

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற 111 ரன்கள் இலக்காக நிர்ணயம்

By: Karunakaran Sat, 31 Oct 2020 5:58:57 PM

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற 111 ரன்கள் இலக்காக நிர்ணயம்

துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் போல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

2 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் ரன் எடுத்தும் எடுக்காமல் (0) டிரண்ட் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பிரித்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், பிரித்வி ஷா 10 ரன் எடுத்த நிலையில் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் கேப்டன் ஷ்ரேயாஸ் உடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

mumbai,111 runs,delhi,ipl 2020 ,மும்பை, 111 ரன்கள், டெல்லி, ஐபிஎல் 2020

29 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டர் ஷ்ரேயாஸ் அய்யர் மும்பை வீரர் ராகுல் சாஹர் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த மார்க்கஸ் ஸ்டாயினஸ் 2 ரன்னில் வெளியேறினார். 24 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.

அடுத்து வந்த ஷிம்ரான் ஹேட்மயர் (11 ரன்), ஹர்ஷ் பட்டேல் (5), அஸ்வின் (12) மும்பை பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் பும்ரா, டிரண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags :
|
|