Advertisement

மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

By: Nagaraj Sun, 04 Oct 2020 9:06:52 PM

மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை அணி அபார வெற்றி... ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரில் இன்றைய நாளுக்கான முதல் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. துபாயின் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

mumbai win,warner,bumrah,hyderabad team,wicket ,மும்பை  வெற்றி, வார்னர், பும்ராஹ், ஹைதராபாத் அணி, விக்கெட்

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 208 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் பாரிஸ்டோ 25 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் 30 ரன்களும் எடுத்து ஓரளவிற்கு கைகொடுத்தாலும் பின்வரிசையில் வந்த வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்கவில்லை.

அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் பவுல்ட், ஜேம்ஸ் பட்டின்சன் மற்றும் பும்ராஹ் ஆகியோர் தல இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Tags :
|
|