Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு

By: Karunakaran Sat, 31 Oct 2020 4:02:06 PM

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டபோது, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் போல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்கவுள்ளது. இரு அணிகள் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில் அடுத்தடுத்த ஆட்டங்களில் தோல்வியடைந்தன. இதனால் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரமாக முயற்சி செய்யும். இதனால் ஆட்டம் இன்று விறுவிறுப்பாக அமையும்.

mumbai,toss,delhi,ipl 2020 ,மும்பை, டாஸ், டெல்ஹி, ஐபிஎல் 2020

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில், ப்ரித்திவி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷப் பண்ட், ஷிம்ரான் ஹிட்மயர், மார்கஸ் ஸ்டாய்னஸ், ஹர்ஷல் பட்டேல், பிரவீன் துபே, ககிசோ ரபாடா, ரவிசந்திரன் அஸ்வின், ஆண்டிஷ் நாட்ஜீ போன்ற வீரர்கள் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில், குவிண்டன் டிகாக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவ்ரவ் திவாரி, குர்னால் பாண்டியா, போல்லார்டு (கேப்டன்), ஜெயந்த் யாதவ், நாதன் ஸ்குடூட்டனைல், ராகுல் சாஹர், டிரண்ட் போல்ட், பும்ரா போன்ற வீரர்கள் உள்ளனர்.

Tags :
|
|
|