Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடரை புறக்கணித்த முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

ஐபிஎல் தொடரை புறக்கணித்த முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

By: Karunakaran Wed, 30 Sept 2020 6:03:02 PM

ஐபிஎல் தொடரை புறக்கணித்த முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

வங்காளதேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் என்பதால் இவரை ஐபிஎல்-லில் விளையாட அனுப்ப வங்காளதேச கிரிக்கெட் போர்டு விரும்பவில்லை. முஸ்தாபிஜூர் ரஹ்மான். முதன்முதலாக ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து வெளியேறிய முஸ்தாபிஜூர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட அணியில் இருந்து விலகினார். இதனால் அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அனுமதி மறுத்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

mustafizur rahman,boycotted,ipl series,bangladesh ,முஸ்தாபிசூர் ரஹ்மான், புறக்கணிக்கப்பட்ட, ஐபிஎல் தொடர், பங்களாதேஷ்

ஆஸ்திரேலியாவில் அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் அந்த இடத்தில் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வங்காளதேச அணி இலங்கை சென்று டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. இதனால் ஐபிஎல் ஏலத்தில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் இடம்பெற வாய்ப்பு இல்லாமல் போனது. வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை செல்ல இருந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரை நம்பியிருந்த முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஐபிஎல் வாய்ப்பை இழந்துள்ளார். ஐபிஎல்-லில் விளையாடியிருந்தால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டிருப்பார். தற்போது தேசிய அணிக்கு விளையாட முடியாமலும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமலும் வருமானத்தை இழந்த சோகத்தில் முஸ்தாபிஜூல் ரஹ்மான் உள்ளார். ஐபிஎல்-லில் விளையாடி இருந்தால் வங்காளதேசம் பணத்திற்கு சுமார் ஒரு கோடி டாக்கா சம்பாதித்து இருப்பேன்’’ என முஸ்தாபிஜூர் ரஹ்மான் வருத்தத்துடன் தெரிவித்தார்.

Tags :