Advertisement

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் காலிறுதிக்கு முன்னேறினார் நடால்

By: Nagaraj Mon, 05 Oct 2020 6:47:06 PM

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் காலிறுதிக்கு முன்னேறினார் நடால்

காலிறுதிக்கு முன்னேற்றம்... பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர்கள் ரபெல் நடால், டொமினிக் தீம் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினார்.

பாரிசில் நடைபெறும் தொடரின் நான்கவது சுற்றில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை 6-1, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தி ரபெல் நடால் காலிறுதிக்குள் நுழைந்தார்.

natal,quarterfinals,austria,french open,tennis ,நடால், காலிறுதி, ஆஸ்திரியா, பிரெஞ்ச் ஓபன், டென்னிஸ்

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், 6-4, 6-4, 5-7, 3-6, 6-3 என்ற செட் கணக்கில், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த Hugo Gaston என்பவரை போராடி வீழ்த்தினார்.

மகளிர் பிரிவில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப், 6-1, 6-2 என்ற செட்டில் போலந்தின் Iga Swiatek-டம் அதிர்ச்சி தோல்வியுற்று காலிறுதி வாய்ப்பை இழந்தார்.

Tags :
|