Advertisement

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் நடால் தோல்வி

By: Nagaraj Wed, 18 Jan 2023 11:55:58 PM

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் நடால் தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியிலிருந்து நடால் வெளியேறியதால், அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு கலைந்தது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ம் தேதி தொடங்கியது. பல சுற்று போட்டிகள் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியின் தொடக்க ஆட்டம் மெல்போர்னில் நேற்று நடந்தது. போட்டியின் போது, நடப்பு சாம்பியனான ரஃபேல் நடால், தனக்குப் பிடித்த மட்டை காணாமல் போனதாகவும், பந்தை பரிமாறும் சிறுவன் அதை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், நடால் வித்தியாசமான மட்டையை பயன்படுத்தி விளையாடினார்.

australian-open-tennis,lost,rafael-nadal, ,ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ், தோல்வி, ரஃபேல் நடால்

இந்த போட்டியில், அவர் ஜாக் டிராப்பரை எதிர்த்து கடுமையாக போராடி 7-5, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இப்போட்டியில் கிடைத்த வெற்றி, நடாலுக்கு முதல் வெற்றியாகும்.

இதையடுத்து இன்று நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் மெக்கென்சி மெக்டொனால்டை எதிர்த்து விளையாடினார். ஆனால் தொடக்கத்திலிருந்தே, போட்டியின் தாக்கம் மெக்கன்சியின் பக்கம் இருந்தது. 63-வது இடத்தில் உள்ள மெக்கன்சி சிறப்பாக செயல்பட்டு முதல் செட்டை எளிதாக கைப்பற்றினார்.

23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முயற்சியில் இருந்த நடால், அடுத்த செட்டையும் இழந்தார். இதனால் அடுத்த செட்டை அவர் கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் மெக்கன்சி அதற்கு இடம் கொடுக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், 3வது செட்டையும் அவர் கைப்பற்றினார். 2 மணி நேரம் 32 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அமெரிக்க வீரர் மெக்கன்சி 4-6, 4-6, 5-7 என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

போட்டியின் போது, நடால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றார். இதனால் அவரால் சரியாக விளையாட முடியவில்லை. போட்டியிலிருந்து நடால் வெளியேறியதால், அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு கலைந்தது.

Tags :
|