Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் நவோமி ஒசாகா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் நவோமி ஒசாகா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

By: Karunakaran Thu, 10 Sept 2020 09:29:02 AM

அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் நவோமி ஒசாகா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்றது. கொரோனா பரவலுக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 32-வது இடத்தில் உள்ள போர்னா கோரிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தொடக்கத்தில் திணறி, சில தவறுகளை இழைத்தார். இதனால் முதல் செட்டை எளிதில் இழந்ததுடன், 2-வது செட்டில் 2-4 என்ற கணக்கில் பின்தங்கினார். பின்னர் சுதாரித்து ஆடிய அவர் 2-வது செட்டை டைபிரேக்கரில் கைப்பற்றினார். பின்னர் அடுத்த செட்டையும் டைபிரேக்கர் வரை போராடி சொந்தமாக்கினார். முடிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 1-6, 7-6 (7-5), 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் போர்னா கோரிச்சை வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதியை எட்டியுள்ளார்.

naomi osaka,semifinals,us open tennis tournament,new york ,நவோமி ஒசாகா, அரையிறுதி, யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி, நியூயார்க்

மற்றொரு கால்இறுதியில் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டா 3-6, 7-6 (7-5), 7-6 (7-4), 0-6, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா, அமெரிக்காவின் செல்பி ரோஜர்சை எதிர்கொண்டார். இதில் ஒசாகா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் செல்பி ரோஜர்சை தோற்கடித்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி, கஜகஸ்தான் புதின்சேவாவை எதிர்கொண்டார். இதில் பிராடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் புதின்சேவாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். ஒரு அரைஇறுதியில் நவோமி ஒசாகா-ஜெனிபர் பிராடி சந்திக்கவுள்ளனர்.

Tags :