Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கருப்பினத்தவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்சினாட்டியில் இருந்து நவோமி ஒசாகா விலகல்

கருப்பினத்தவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்சினாட்டியில் இருந்து நவோமி ஒசாகா விலகல்

By: Karunakaran Thu, 27 Aug 2020 3:47:16 PM

கருப்பினத்தவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்சினாட்டியில் இருந்து நவோமி ஒசாகா விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்-க்கு பயிற்சியாக கருதப்படும் சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று இரவு நடைபெறவிருந்த அரையிறுதியில் ஒசாகா, எலிஸ் மெர்ட்டன்ஸ்-ஐ எதிர்கொள்ளவிருந்தார்.

இந்நிலையில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அவரது முடிவு டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. விஸ்கான்சின் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு பின்னாலிருந்து துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.

naomi osaka,cincinnati,protest,black man ,நவோமி ஒசாகா, சின்சினாட்டி, எதிர்ப்பு, கருப்பு மனிதன்

படுகாயமடைந்த ஜேக்கப் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது.

அப்பகுதிக்கு விரைந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைக்கும் விதமாக கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டங்களுக்கு நடுவே நவீன ரக துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு இளைஞன் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினான். இதில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags :