Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இளம் வீரர் நடராஜன்

வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இளம் வீரர் நடராஜன்

By: Nagaraj Wed, 18 Nov 2020 2:15:18 PM

வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இளம் வீரர் நடராஜன்

வலைப்பயிற்சியில் தீவிரம்... ஆஸ்திரேலியாவில் இளம் வீரர் நடராஜன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

bcci,greetings,natarajan,bowling video,web training ,பிசிசிஐ, வாழ்த்து, நடராஜன், பந்து வீசும் வீடியோ, வலைப்பயிற்சி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி சிட்னியில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

சிட்னியில் வலைப்பயிற்சியில் நடராஜன் பந்துவீசும் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. நடராஜன் முதன்முறையாக இந்திய அணியில் இடம்பெற்று வலைப்பயிற்சி மேற்கொள்கிறார். கனவு மெய்பட்ட தருணம் இது என்று பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது.

Tags :
|