Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்

3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்

By: Karunakaran Sun, 14 June 2020 12:09:30 PM

3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் போட்டியின் போதும், போட்டி இல்லாத காலங்களிலும் தாங்கள் எங்கு இருக்கிறோம் என 3 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். மேலும், ஊக்க மருந்து பரிசோதனைக்கும் தயாராக இருக்க வேண்டும்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் சில வீரர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு சரியான தகவலை அளிக்கவில்லை. அதன்படி, தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் விதிமுறையை முறையாக கடைப்பிடிக்க தவறியதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புஜாரா, லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

india,cricket,corona,national drug prevention agency ,கிரிக்கெட்,புஜாரா,கொரோனா,தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை

இதுகுறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் டைரக்டர் ஜெனரல் நவின் அகர்வால் கூறுகையில், தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் கேட்கப்படும் எங்கு இருக்கிறேன்? என்பது குறித்த விவரத்தை வீரர்கள் இரண்டு வழிகளில் பூர்த்தி செய்யலாம். சம்பந்தப்பட்ட வீரரே அதனை எங்கள் இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம். அல்லது வீரர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட விளையாட்டு அமைப்பு விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கிரிக்கெட் வீரர்களுக்கான இந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று கூறினார். வீரர்கள் யாரேனும் 3 முறை தங்களது இருப்பிடம் குறித்த தகவலை முறைப்படி தெரிவிக்க தவறினால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை தடை விதிக்க ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையில் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags :
|
|