Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று வரை 11 பதக்கங்கள் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று வரை 11 பதக்கங்கள் வென்ற இந்தியா

By: Nagaraj Tue, 26 Sept 2023 5:39:34 PM

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று வரை 11 பதக்கங்கள் வென்ற இந்தியா

ஹாங்சு: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம்... ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று துப்பாக்கி சுடுதல் பிரிவு மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. மொத்தம் 11 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

சீனாவின் ஹாங்சு நகரில் ஆசிய விளையாட்டு 19வது சீசன் நடக்கிறது. நேற்றும் (செப்.,25) இந்திய வீரர்கள் வேற லெவலில் பட்டையை கிளப்பினர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி, 10 மீ., ஏர் ரைபிள்(துப்பாக்கி சுடுதல்) பிரிவில், இந்திய அணி தங்கம் வென்றது. திவ்யான்ஷ் சிங், ருத்ரங்காஷ் பாலசாகேப், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் அணி தங்கம் வென்றது. 1893.7 புள்ளிகள் பெற்று உலக சாதனை பெற்றுள்ளனர்.

தனிநபர் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார். அதேபோல், ஆண்கள் 25 மீ ரேபிட் பைல் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் விஜய்வீர் சிங், ஆதர்ஷ் சிங், அனீஷ் பன்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.

gold,asian games,tournament,india,silver,bronze ,தங்கம், ஆசிய விளையாட்டு, போட்டி, இந்தியா, வெள்ளி, வெண்கலம்

நால்வர் துடுப்பு படகு போட்டியில் யஷ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார், ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. அதேபோல், துடுப்பு படகு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பாபு லால் யாதவ், லெக் ராம் ஜோடி வெண்கலம் வென்றது.

மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்., இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்., இழப்பிற்கு 97 ரன்களே எடுத்து தோல்வியடைந்தது. இதனையடுத்து மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன. நேற்று இரண்டு தங்கம், 4 வெண்கலம் வென்றது. இதன்மூலம் இரு தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் இந்தியா, பதக்க பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது.

Tags :
|
|
|