Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் 2020 போட்டி நடத்த ஐக்கிய அரசு அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை

ஐபிஎல் 2020 போட்டி நடத்த ஐக்கிய அரசு அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை

By: Nagaraj Wed, 15 July 2020 7:53:51 PM

ஐபிஎல் 2020 போட்டி நடத்த ஐக்கிய அரசு அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை

பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்... உலகக்கோப்பை டி20 குறித்து ஐசிசி எதையும் வாயைத் திறக்காத நிலையில் பிசிசிஐ, ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் ஐபிஎல் 2020 தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகநாடுகளில் போகப்போக அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ரசிகர்கள் இல்லாமல் ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படும் வேளையில், இந்தியாவில் நடத்துவதை விட யு.ஏ.இ-யில் ஐபிஎல் நடத்துவது நல்வாய்ப்பு என்று பிசிசிஐ கருதுவதாகத் தெரிகிறது.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டை ஐசிசி ஊற்றி மூடுவதற்குத்தான் அதிக வாய்ப்பென்று ஐசிசி வட்டாரங்கள் சூசகமாக தெரிவிக்கின்றன. ஐசிசி இது பற்றி வாயைத் திறக்கவில்லை என்றாலும் தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா தரப்பிற்கு நெருக்கமானவர்கள் டி20 உலகக்கோப்பை ரத்தாகும் என்று கூறுகின்றனர்.

september,ipl,negotiations,series,bcci ,செப்டம்பர், ஐபிஎல், பேச்சுவார்த்தை, தொடர், பிசிசிஐ

ஐபிஎல் போட்டிகளை நடத்தாவிட்டால் பிசிசிஐக்கு ரூ.4000 கோடி நஷ்டம் ஏற்படும், அணி உரிமையாளர்கள், ஒளிபரப்பு கூட்டாளிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்பதால் எப்படியாவது ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த பிசிசிஐ படாதபாடு படுகிறது.

பிசிசிஐ பெறும் ஒளிபரப்பு உரிமை தொகையில் 8 அணிகளுக்கும் 50% பங்கு உண்டு. ஐபிஎல் அணிகள் ஒரு சீசனில் ரூ.100 கோடி முதல் 150 கோடி வரை லாபம் ஈட்டுவார்கள் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2014-ல் ஏற்கெனவே ஐபிஎல் போட்டிகளின் ஒருபகுதி யுஏஇ-யில் நடந்தன. வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடருக்காகவே காத்திருக்கின்றனர். இந்நிலையில் யுஏஇ-யில் செப்டம்பரில் ஐபிஎல் நடக்க வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.

Tags :
|
|