Advertisement

வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து தோல்வி

By: Nagaraj Mon, 24 Oct 2022 9:48:16 PM

வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து தோல்வி

ஹோபர்ட்: வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி தோல்வி அடைந்துள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

காலையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஷாகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்கதேசம் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொண்டது.

ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் நஜ்முல் உசேன் 25 ரன்களும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்கார் 15 ரன்களும் எடுத்தனர்.

bangladesh,hobart,netherland,shakib al-hasan ,டி20 உலக கோப்பை, நெதர்லாந்து, வங்கதேசம், ஹோபர்ட்

நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அணியில் அதிகபட்சமாக அபிப் ஹுசைன் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதன்பின் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடியது.


அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மேக்ஸ் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த பஸ் டி லீட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க காலின் அக்கர்மேன் போராடினார்.


ஆனால் அவருக்கு உதவியாக மறுபக்கம் யாரும் நின்று விளையாடவில்லை. கொலின் தன் பங்குக்கு 62 ரன்கள் எடுத்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது. இதனால் வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags :
|