Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 431 ரன்கள் எடுத்தது

பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 431 ரன்கள் எடுத்தது

By: Karunakaran Sun, 27 Dec 2020 2:51:58 PM

பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 431 ரன்கள் எடுத்தது

நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுக்கானுவில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து இருந்தது. முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 94 ரன்னும், ஹென்றி நிகோலஸ் 42 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து ஆடியது. வில்லியம்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 82-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 23-வது செஞ்சுரி ஆகும். மறுமுனையில் இருந்த நிக்கோலஸ் அரை சதத்தை எடுத்தார். அவர் 56 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து வில்லியம்சன் 129 ரன் குவித்து வெளியேறினார்.

new zealand,431 runs,test match,pakistan ,நியூசிலாந்து, 431 ரன்கள், டெஸ்ட் போட்டி, பாகிஸ்தான்

பின்னர் வந்த வீரர்களில் வாட்லின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 73 ரன்கள் எடுத்தார். 155-வது ஓவரில் நியூசிலாந்து அணி 431 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 4 விக்கெட்டும் யாசில் ஷா 3 விக்கெட்டும் முகமது அபாஸ், அசரப், நசீம் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான மசூத் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜமீசன் ஓவரில் வெளியேறினார். பாகிஸ்தான் அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 30 ரன்கள் எடுத்திருந்தது. அபிட் அலி 19 ரன்களுடனும் முகமது அபாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

Tags :